Latestமலேசியா

முதல் முறையாக மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் நாடு தழுவிய STEM புரட்சி: கோலாலம்பூரில் ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சி தொடக்கம்

கோலாலம்பூர், மே-2,

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேம்பாடு மற்றும் நலனபிவிருத்திச் சங்கம், கூட்டரசு பிரதேசக் கல்வி இலாகாவுடன் இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க 2-நாள் STEM பயிற்சித் திட்டத்தை கோலாலம்பூர் ஃபிளட்சர் தமிழ்ப்பள்ளியில் நடத்தியுள்ளது.

ஏப்ரல் 28, 29 ஆகியத் தேதிகளில் ​நாடு தழுவிய அளவில் முதன்முறையாக நடத்தப்பட்ட இத்திட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட 30 தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று, நவீன கற்பித்தல் முறைகளைக் கற்றனர்.

​இந்த முன்னோடித் திட்டத்திற்கு இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சிறப்பு நிதியுதவி வழங்கி ஆதரவளித்துள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் மாணவர்களின் திறனை மேம்படுத்த ஆசிரியர்களை நவீனக் கருவிகளுடன் தயார் செய்வதே இத்திட்டத்தின் இலக்காகும் என, சங்கத்தின் தலைவர் வெற்றிவேலன் மகாலிங்கம் கூறினார்.

​இம்முயற்சிக்குக் கல்வி அமைச்சு, பிளட்சர் தமிழ்ப்பள்ளி நிர்வாகம் மற்றும் 14 தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கியதாகவும் அவர் சொன்னார்.

தமிழ்ப்பள்ளிகளின் கல்வி வளர்ச்சியில் இது ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!