Latestமலேசியா

முன்னாள் IGP, அரசுக்கு எதிராக இந்திரா காந்தி தொடுத்த வழக்கு தள்ளுபடி

கோலாலம்பூர் , ஜூன் 28 – போலீஸ் படையின் முன்னாள் தலைவர் மற்றும்  அரசாங்கத்திற்கு எதிராக  பாலர்  பள்ளியின் முன்னாள் ஆசிரியை M.  இந்திரா காந்தி  தொடுத்திருந்த  வழக்கை   உயர்நீதிமன்றம்  இன்று தள்ளுடி  செய்தது.  இஸ்லாமிய சமயத்தை தழுவிய தனது முன்னாள் கணவரான   கே. பத்மநாதன் ( Pathmanathan ) எனப்படும்   Muhamad  Riduan Abdullah  வை கண்டுப்பிடித்து,  2008ஆம் ஆண்டு அவரால் கடத்திச் செல்லப்பட்ட  தனது மகளை   ஒப்படைக்கும்படி  உயர்நீதிமன்றத்தின் உத்தரவை  அமல்படுத்தத் தவறியதற்காக  முன்னாள்  .ஜி.பி  அப்துல் ஹமிட் படோர் ( Abdul Hamid Bador ) , இதர அதிகாரிகள் மற்றும்  அரசாங்கத்திற்கு எதிராக    இந்திரா காந்தி   வழக்கு தொடுத்திருந்தார். 

  Balace of probabilities   எனப்படும் சட்டப்பூர்வ சிவில் அம்சங்களை  நிருபிப்பதற்கு வாதி தவறிவிட்டார் என்பதால் அவரது வழக்கு மனுவை  தள்ளுபடி செய்வதாக   நீதித்துறை ஆணையர் ராஜா அகமட்  மோஷானுடின் (   Raja Ahmad Mohzanuddin Shah Raja Mohzan ) தீர்ப்பளித்தார்.  தனது வழக்கு மனுவில் அரசாங்க  பணியாளர்களுக்கு எதிராக  கூறியிருந்த  கூற்று தவறானது என்பதோடு அதனை இந்திரா காந்தி  நிருபிக்க தவறிவிட்டார் என்தால்  இந்த வழக்கு மனுவை  நிராகரிப்பதாக    நீதித்துறை ஆணையர்  தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!