கோலாலம்பூர், ஜூலை-12, SPM தேர்வில் 10A பெற்ற மிகச் சிறந்த மாணவர்களில் மேலும் 400 பேர் மெட்ரிகுலேஷன் திட்டத்தில் பதிந்துக் கொள்கின்றனர்.
அவர்களில் 367 பேர் பூமிபுத்ரா அல்லாத மாணவர்கள்; பலர் நேற்றே பதிந்துக் கொண்டு விட்ட நிலையில், எஞ்சியவர்கள் இன்று பதிந்துக் கொள்வரென கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் (Fadhlina Sidek) கூறினார்.
இன்னும் வாய்ப்புக் கிடைக்காத 712 மாணவர்களின் பிரச்னை அடுத்த மாதத்தின் மூன்றாவது வாரத்திற்குள் தீர்க்கப்படும்.
பல்கலைக்கழக நுழைவுக்கான UPU முடிவுகள் ஆகஸ்ட் ஆறாம் தேதி வெளியாகின்றன; அப்போது மெட்ரிகுலேஷன் செல்வதா அல்லது UPU வாய்ப்பைத் தேர்ந்தெடுப்பதா என்பதை அவர்களிடமே விட்டு விடலாம் என அமைச்சர் சொன்னார்.
மெட்குரிலேஷன் கல்வி வாய்ப்பு, நடப்பு இட ஒதுக்கீட்டில் தகுதி அடிப்படையில் (meritocracy) வழங்கப்படுகிறது.
அதாவது, 60 விழுக்காட்டு இடங்கள் குறைந்த வருமானம் பெறும் B40 குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கும், மீதி 40 விழுக்காட்டு இடங்கள் நடுத்தர வருமானம் பெறும் M40 மற்றும் உயர்தர வருமானம் பெறும் T20 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஒதுக்கப்படும்.
இலக்கு வைக்கப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு கிடைப்பதை உறுதிச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமென, ஃபாட்லீனா சொன்னார்.
SPM தேர்வில் 10A பெற்ற மாணவர்களில் மெட்ரிகுலஷன் கல்விக்கு விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கை 4,877 பேராகும்.
அவர்களில் 2,610 பேர் பூமிபுத்ரா அல்லாத மாணவர்கள் ஆவர்.