Latestமலேசியா

ரமலான் மாதத்தில் உணவு வீண் விரயத்தை தவிருங்கள் ; CAP வலியுறுத்தல்

ஜோர்ஜ் டவுன், மார்ச் 12 – ஒவ்வொரு ஆண்டும் புனித ரமலான் மாதத்தின் போது, உணவு விரயம் 15 முதல் 20 விழுக்காடு வரை அதிகரிப்பதை புள்ளி விவரம் காட்டுகிறது.

குறிப்பாக, கடந்தாண்டு ரமலான் மாதம் நெடுகிலும், சுமார் 90 ஆயிரம் டன் உணவு குப்பையில் கொட்டப்பட்டதாக, CAP – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூறியுள்ளது.

அதனால், உணவை வெறுமனே விரயமாக்க வேண்டாம் என பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் மொஹிடின் அப்துல் காடீர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அப்படி விரயம் செய்யப்படும் உணவு, யாருக்கும் எந்த பயனும் இன்றி குப்பையில் தான் கொட்டப்படும்.

அதனால், உணவு விரயத்தை தவிர்ப்போம். இந்த ரமலான் மாதத்தை அர்த்தமுள்ளதாகவும், ஆன்மீக ரீதியாக மேலும் செம்மையானதாகவும் மாற்ற தீர்ப்பானிப்போம் என மொஹிடின் அழைப்பு விடுத்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!