Latestஉலகம்

ரஷ்ய அதிபர் தேர்தல்; ஐந்தாவது முறையாக புட்டின் அபார வெற்றி

மாஸ்கோ, மார்ச் 18 – ரஷ்ய அதிபர் தேர்தலில், அந்நாட்டின் நடப்பு அதிபர் விளாடிமிர் புட்டின் அபார வெற்றி பெற்றுள்ளார்.

அதன் வாயிலாக, 71 வயது புட்டின், அடுத்த ஆறாண்டுகளுக்கு ரஷ்யாவின் அதிபராகப் பதவி வகிக்கப்போவது உறுதியாகியுள்ளது.

அடுத்த ஆறாண்டுகள் தவணையை நிறைவுச் செய்தால், கடந்த 200 ஆண்டுகளில் ரஷ்யாவின் மிக நீண்ட காலம் அதிபராக பதவி வகித்தவர் என்ற பெருமை புட்டினை சாரும்.

தற்சமயம், முன்னாள் அதிபர் ஜோசப் ஸ்டாலின், அந்த சிறப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 17-ஆம் தேதி, வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், புட்டின் 87.8 விழுக்காட்டு பெரும்பான்மை வாக்குகளை பெற்றதாக கூறப்பட்டது.

சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த பிறகு, ரஷ்ய அதிபர் ஒருவருக்குப் பதிவான அருதி பெரும்பான்மை எண்ணிக்கையிலான வாக்குகள் அவையாகும்.

அந்தக் கருத்துக் கணிப்பு முடிவு, துல்லியமாக இருப்பதை முதற்கட்டமாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

எனினும், ரஷ்ய அதிபர் தேர்தல் சுதந்திரமாக அல்லது நியாயமாக நடத்தப்படவில்லை என அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்சியுள்ளன.

அரசியல் எதிர்ப்பாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டதையும், கருத்துச் சுதந்திரம் முடக்கப்பட்டதையும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.

புட்டினை எதிர்த்துக் களமிறங்கிய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நிக்கோலாய் கரிடோனோவ் நான்கு விழுக்காட்டிற்குக் குறைவான வாக்குகளுடன் இரண்டாம் நிலையிலும், புதியவரான விளாடிஸ்லாவ் தவான்கோவ் மூன்றாம் நிலையிலும் லெனோய்ட் ஸ்லட்ஸ்கி நான்காம் நிலையிலும் இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!