
நியூ யோர்க், மே-18 – அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு அதி தீவிர புரோஸ்டேட் புற்றுநோய் கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவரின் எலும்பு வரை அது பரவியிருப்பதாக, பைடன் அலுவலகம் வெளியிட்ட அறிக்கைத் தெரிவித்தது.
சிறுநீர் தொற்று அறிகுறிகள் காரணமாக 82 வயது பைடன் கடந்த வாரம் மருத்துவரை சென்றுகண்ட நிலையில், வெள்ளிக்கிழமையன்னு புற்றுநோய் உறுதியானது.
10-க்கு 9 என்ற குறியீட்டில் மிகவும் தீவிரமான புற்றுநோயாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால், இது வேகமாகப் பரவும் அபாயத்தைக் கொண்டது.
இந்நிலையில் எந்த மாதிரியான சிகிச்சைகளை மேற்கொள்வது என்பது பற்றி குடும்பத்தார் கலந்தாலோசித்து வருகின்றனர்.
இவ்வேளையில் பைடனின் புற்றுநோய் தகவல் வெளியானதும், நடப்பு அதிபர் டோனல்ட் டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் கவலையும் வருத்தமும் தெரிவித்தார்.
விரைவிலேயே பைடன் குணமடைய பிராத்திப்பதாக டிரம்ப் சொன்னார்.
பைடனின் துணையதிபராக இருந்த கமலா ஹாரீஸும் தனது X தளத்தில் “பைடன் ஒரு போராளி, மனத்திடத்தோடு இதனை அவர் எதிர்கொள்வார்” என ஊக்கமூட்டினார்.
புரோஸ்டேட் என்பது, தோல் புற்றுநோய்க்கு அடுத்து ஆண்களை அதிகம் தாக்கும் புற்றுநோயாகும்.
ஒவ்வொரு 100 ஆண்களில் 13 பேருக்கு அவர்களது வாழ்நாளின் ஒரு கட்டத்தில் இந்த புரோஸ்டேட் புற்றுநோய் உண்டாகும் என, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவிக்கிறது