Latest

லம்போர்ஜினியைக் மிஞ்சிய மைவி; வைரலான காணொளி

கோலாலம்பூர், ஜூன் 19 – சுங்கச்சாவடி அதாவது டோலை கடந்தபின், லம்போர்ஜினி உள்ளிட்ட சொகுசு கார்கள் வேகமாகச் செல்லும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஆனால், இணையவாசிகளின் கவனத்தை லம்போர்ஜினியைக் காட்டிலும் பெரோடுவா மைவி வாகனம்தான் அதிகம் ஈர்த்துள்ளது.

வாகனங்கள் வெளியேறும் பகுதியிலிருந்து தீப்பொறி பறந்தபடி, மற்ற வாகனங்களை முந்திச் செல்லும் காட்சி பலரையும் ரசிக்க வைத்துள்ளது.

இதையடுத்து, “எவ்வளவு வேகமான காராக இருந்தாலும், அதை முந்திச் செல்ல ஒரு மைவி இருக்கும்” என சமூக வலைத்தளங்களில் நகைச்சுவை கருத்துகள் குவிந்து வருகின்றன.

மலேசியர்களின் ‘சாலைகளின் ராஜா’ என்ற பெயரை மைவி மீண்டும் ஒருமுறை இந்த வைரல் காணொளி மூலம் நிரூபித்துள்ளதாக இணையவாசிகள் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!