Latest

ரபிசி, நிக் நஸ்மி மீதான நடவடிக்கை வழக்கறிஞர் முடிவுக்கு பி.கே.ஆர் விட்டு விட்டது – புசியா

கோலாலம்பூர், ஜூன்-19 – PKR கட்சியிலிருந்து விலகிய பண்டான் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி மற்றும் செத்தியாவங்சா நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அகமட் ஆகியோருக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கைகள், கட்சியால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று PKR பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் புசியா சாலே ( Fuziah Salleh) தெரிவித்தார்.

PKR-இன் முன்னாள் துணைத் தலைவர் மற்றும் முன்னாள் உதவித் தலைவர் ஆகியோருக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சியின் சட்டக் குழுவே முடிவெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர்கள் ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டதோடு கட்சியிலிருந்து விலகிவிட்டனர். எனவே, இது தொடர்பான விஷயங்களை சட்டக் குழுவிடம் ஒப்படைப்பேன் என்று Fuziah கூறினார்.

இன்று தாமான் டயாவில் (Taman Daya) உள்ள ​​(Econsave Cash & Carry) பல்பொருள் அங்காடியில் நடைபெற்ற ரஹ்மா மடானி விற்பனைத் திட்டத்தைப் பார்வையிட்ட பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவின துணை அமைச்சருமான Fuziah இத்தகவலை வெளியிட்டார்.

முன்னதாக, மே 17 ஆம் தேதியன்று , PKR கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ரபிஸி மற்றும் நிக் நஸ்மி ஆகியோர் பண்டான் மற்றும் செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பதவிகளைத் துறந்தனர்.

கட்சித் தாவல் தடுப்புச் சட்ட விதிகளின் கீழ் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும், அவர்கள் இருவர் மீதும் 10 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு தொகையை பெறுவது குறித்தும் பி.கே.ஆர் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!