லாஹாட் டத்து, செப்டம்பர் -4, சபா, லாஹாட் டத்துவில் கடை வீட்டின் முதல் மாடியிலிருந்து குதிக்க முயன்ற பதின்ம வயது பெண்ணை தீயணைப்பு-மீட்புத் துறை காப்பாற்றியது.
நேற்றிரவு 8 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்ததும் மாவட்ட தீயணைப்பு-மீட்புத் துறை குழுவும், EMRS எனப்படும் அவசர சேவை உதவிப் பிரிவும் சம்பவ இடம் விரைந்தன.
முதல் மாடியிலிருந்து குதிப்பதற்குத் தயாரான பெண்ணை, மீட்புப் குழு ஒருவழியாகக் காப்பாற்றியது.
பின்னர், மேல் நடவடிக்கைக்காக அப்பெண் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.