Latestமலேசியா

வங்காளதேசத்திலிருந்து, மலேசியர்களை தாயகம் அழைத்து வரும் விமானம், இன்று கலை புறப்பட்டது

செப்பாங், ஜூலை 23 – வங்காளதேசத்தில் பதற்றம் நீடிப்பதை தொடர்ந்து, அங்கு இருக்கும் மலேசியர்களை தாயகம் அழைத்து வரும் சிறப்பு விமானம், இன்று காலை மணி 7.30 வாக்கில் புறப்பட்டது.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உத்தரவுக்கு ஏற்ப, வங்காளதேசத்திலிருந்து மலேசியர்களை தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

350 பேர் பயணிக்கும் வசதி கொண்ட, ஏர் ஏசியா நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ330 ரக விமானம், உள்நாட்டு நேரப்படி காலை மணி 9.20 வாக்கில், டாக்காவிலுள்ள, ஹஸ்ரத் ஷாஜலால் (Hazrat Shahjalal) சர்வதேச விமான நிலையம் சென்றடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, டாக்காவிலுள்ள மலேசிய தூதரகத்தில், நேற்று முதல் மாணவர்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமான மலேசியர்கள் தங்கியிருப்பதாக, வெளியுறவு அமைச்சின் தெற்காசியா மற்றும் மத்திய ஆசிய பிரிவின் செயலாளர் டத்தோ டாக்டர் ஷசெலினா ஜைனுல் அபிடின் (Datuk Dr Shazelina Zainul Abidin) கூறியுள்ளார்.

வங்காளதேசத்தில் இருக்கும் மலேசியர்களை தாயகம் கொண்டு வரும் பணிகள் ஜுலை 12-ஆம் தேதியே தொடங்கி இருக்க வேண்டும். எனினும், அனுமதிக்காக காத்திருந்ததோடு, மாணவர்கள் மலேசிய தூதரகம் வந்தடையும் வரை காத்திருந்ததால், சற்று கால தாமதம் ஏற்பட்டதாகவும் ஷசெலினா தெளிவுப்படுத்தினார்.

வங்காளதேசத்திலுள்ள மலேசிய மாணவர்களை தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, நேற்று பிரதமர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!