Latestமலேசியா

வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் விபத்து வர்த்தகர் மரணம் 7 மாத குழுந்தை உட்பட அறுவர் காயம்

பத்து பஹாட், மார்ச் 4 – வடக்குதெற்கு நெடுஞ்சாலையின்  112.6ஆவது கிலோமீட்டரில்  தங்களது   MPV  விபத்துக்குள்ளானதில்  வர்த்தகர் ஒருவர் மரணம் அடைந்ததோடு ஏழு மாத குழந்தை உட்பட  அவரது குடும்பத்தைச் சேர்ந்த  அறுவர் காயம் அடைந்தனர்.  Yong peng  மற்றும்    Pagoh வுக்கு செல்லும்  சாலையில் ஞாயிற்றுக்கிழமை  இரவு மணி  8.55 அளவில் அந்த விபத்து  நிகழ்ந்ததாக  Batu Pahat  OCPD துணை கமிஷனர்   Ismail Dollah  தெரிவித்தார்.  கெந்திங்  மலையிலிருந்து   Endau வை நோக்கி  தமது   MPV வாகனத்தை  40 வயதுடைய NG Chee Keong என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.  திடீரென அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து  சாலையின்  தடுப்பில் மோதியபின் தலைகுப்புற கவிழ்ந்தது.  தலையில் கடுமையாக காயத்திற்குள்ள  NG Chee Keong விபத்து நிகழ்ந்த இடத்திலேயே     மரணம் அடைந்தார்.  

அந்த MPV வாகனத்திற்குள்  NG Chee Keong பின்     31 வயது மனைவி, அவரது  55 வயதுடைய மாமியார், ஆறு முதல்  14 வயதுடைய  மூன்று  பிள்ளைகள் மற்றும் குழந்தை என ஆறு பயணிகள்  இருந்ததாக  ACP  Ismail   தெரிவித்தார்.  அவர்கள் அனைவரும்  சொற்ப அளவில் காயம் அடைந்ததால்   Sultanah Norah Ismail   மருத்துவமனையில்   சிகிச்சை பெற்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!