Latestஉலகம்

விமானத்தின் இயந்திரத்திற்குள் நாணயங்களை வீசிய பயணி; 4 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்ட

பெய்ஜிங் , மார்ச் 10 – சீனாவின் ‘Southern Airlines’ விமானத்தின் இயந்திரத்திற்குள் பயணி ஒருவர் நாணயங்களை வீசியதால், அந்த விமானம் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக சென்றடைந்தது. ஹைனன் வட்டாரத்திலிருந்து பெய்ஜிங்கிற்கு 3 மணி நேரம் 40 நிமிடம் சென்றடைய வேண்டிய அந்த விமானம் தாமதமாக சென்றடைந்தது. இந்த செயலுக்குக் காரணமானவர் என்று நம்பப்படும் பயணியிடம் விமானத்தின் பணியாளர்கள் கேள்வி கேட்டதை உள்ளூர் ஊடகங்களால் பகிரப்பட்ட காணொளியில் காண முடிந்தது.

சீன ஊடகங்களால் அடையாளம் காணப்படாத அந்த நபரிடம், விமான இயந்திரத்திற்குள் எத்தனை நாணயங்கள் வீசப்பட்டன என்று கேட்கப்பட்டது. மூன்று முதல் ஐந்து நாணயங்களை வீசியதாக அந்த பயணி பதில் அளித்தார். எனினும் அந்த பயணியின் அடையாளம் வெளியிடப்படவில்லை. அந்த பயணியை, விமான நிலைய போலீசார் கைது செய்தனர். விமானத்தின் இயந்திரத்திலிருந்து சில்லறை நாணயங்கள் வெளியே எடுக்கப்பட்ட பின் அந்த விமானம் பெய்ஜிங்கிற்கு புறப்பட்டது. அந்த நபருக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டுவரப்படுமா அல்லது அவருக்கு எவ்வளவு அபராதத் தொகை விதிக்கப்படும் என்பது குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!