Latestமலேசியா

விமான டிக்கெட்டுகளுக்கு நிதியளித்த மலேசியர்களுக்கு இளம் கராத்தே வீரர்கள் நன்றி

கோலாலம்பூர், மார்ச் 2 – சமூக வலைத்தளங்கள் என்றால் தேவையற்ற சர்ச்சைகள், பொய் செய்திகள் என்றுதான் இருக்கும் என ஒரு சிலர் தவறான சிந்தனையை கொண்டிருந்தாலும் உதவிகள் உட்பட பல்வேறு நல்ல விவகாரத்திற்கும் அவற்றை பயன்படுத்த முடியும் என்பதை அடிக்கடி மலேசியர்கள் நிருபித்து வருகின்றனர். கோலாலம்பூரில் நடைபெற்ற அனைத்துலக டேக்வண்டோ போட்டியில் கலந்துகொள்வதற்காக சபாவைச் சேர்ந்த இளம் வீரர்கள் சண்டகானிலிருந்து கோத்தா கினபாலு வந்தடைந்த போது கோலாம்பூர் செல்லவேண்டிய தங்களது விமானத்தை தவறவிட்டனர்.

மீண்டும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்க முடியாமல் அந்த டேக்வண்டோ வீரர்கள் வேதனையில் தத்தளித்தனர். இந்த விவகாரம் சமூக வலைத்தளத்தில் வெளியானதை தொடர்ந்து அவர்கள் கோத்தா கினபாலுவிலிருந்து கோலாலம்பூர் வருவதற்கான டிக்கெட்டிற்கு தேவையான நிதியை சமூக வலைத்தளங்கள் மூலம் மலேசியர்கள் வாரி வழங்கினர். நான்கு மணி நேரத்தில் அவர்களுக்கு RM 18 ,000 ரிங்கிட் நிதி திரண்டது. அந்த டேக்வண்டோ குழுவினர் தங்களுக்கு கிடைத்த நிதியின் மூலம் உடனடியாக கோலாலம்பூருக்கான விமான டிக்கெட் வாங்கியதோடு அனைத்துலக ‘Hwarang Warrior Taekwondo’ போட்டியில் கலந்துகொண்டனர்.

அக்குழுவில் இடம்பெற்றிருந்த 12 வயது சிறுவன் ‘Leonel Bellvin’ ஆண்களுக்கான 38 முதல் 45 கிலோவுக்கான ‘kyorugi (combat)’ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றான். விமானத்தை தவறவிட்டும் பொதுமக்கள் கோலாலம்பூருக்கு வந்து போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றதற்காக நிதியுதவி வழங்கிய அனைவருக்கும் கு அந்த தெக்வாண்டோ குழுவினர் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!