Latestமலேசியா

விற்பனை மையத்தில் தீ விபத்து; 5 கார்கள் அழிந்தன

பெனம்பாங், மார்ச் 24 – சபா , பெனம்பாங்கில் ஜாலான் புண்டுசனில் கார் விற்பனை மையத்தில் நிகழ்ந்த தீவிபத்தில் ஐந்து கார்கள் அழிந்தன.

கொள்கலன் ஒன்றும் அழிந்த அந்த தீ விபத்தில் உயிர் சேதம் அல்லது எவரும் காயம் அடையவில்லை.

தீ விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் நான்கு தீயணைப்பு வண்டிகளைச் சேர்ந்த 36 தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு அனுப்பிவைக்கப்பட்டதாக சபா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் உதவி சூப்பிரடென்டன் ‘Rick Sing Ramday’ கூறினார்.

இந்த விபத்தில் கார் விற்பனைக் கடை ஒன்றும் 80 விழுக்காடு அழிந்ததாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!