Latestமலேசியா

வெட்டுக் கிளி, பட்டுப் புழுக்கள், தேனிக்கள் உட்பட 16 வகை பூச்சிகளை உண்ண சிங்கப்பூர் அனுமதி

கோலாலம்பூர், ஜூலை 9 – மனிதர்கள் உண்ணக்கூடிய 16 வகை பூச்சி உணவுகளை SFA எனப்படும் சிங்கப்பூர் உணவு நிறுவனம் அங்கீகரித்துள்ளது. இவற்றில் வெட்டுக்கிளி, Cengkerik, பட்டுப் புளுக்கள், தேனிக்கள் ஆகியவையும் அடங்கும். இதனைத் தொடர்ந்து உடனடியாக அமலுக்கு வரும் வகையில், , பூச்சிகள் மற்றும் பூச்சி தயாரிப்புகளை இறக்குமதி செய்ய சிங்கப்பூர் உணவு நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த பூச்சிகள் மற்றும் பூச்சியிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் விலங்குகளுக்கு அல்லது மனிதர்களுக்கு உணவாக பயன்படுத்தப்படலாம்” என்று SFA வர்த்தகர்களுக்கு ஒரு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

மனித அல்லது விலங்கு உணவிற்காக பூச்சிகளை இறக்குமதி செய்ய, வளர்க்க வணிகங்கள் விரும்பினால் அவை பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களும் இந்த கட்டமைப்பில் அடங்கும். பட்டியலில் உள்ள பூச்சிகள் மனித உணவாக இருந்த வரலாறு இருப்பதாக SFA கூறியது. பட்டியலிடப்படாத பிற பூச்சிகள் மனித உணவாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு SFA மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டும்.ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட குறிப்பிட்ட பூச்சிகளை உணவாகப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகள் மற்றும் பிரதேசங்களைப் பற்றிய முழுமையான அறிவியல் ஆய்வுக்குப் பிறகே இந்த வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டன. தயாரிப்புகளின் உண்மையான தன்மையைக் குறிக்க, தயாரிப்புப் பேக்கேஜிங் லேபிளிட வேண்டும். சந்தையில் கிடைக்கும் மற்ற உணவுகளைப் போலவே, பூச்சி தயாரிப்புகளும் SFA ஆய்வு மற்றும் கண்காணிப்புக்கு உட்பட்டவை. இதில் உணவு பாதுகாப்பு சோதனைக்கான மாதிரிகள் அடங்கும். SFA உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்படாத உணவுகள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!