Latestமலேசியா

வெளி நடவடிக்கைகள் தொடர்பான விதிமுறைகளை பள்ளிகளும் கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும் -கல்வி அமைச்சு வலியுறுத்து

சிரம்பான், ஏப் 21 – குறுக்கோட்டப் போட்டியில் கலந்துகொண்டபோது 14 வயது மாணவன் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து வெளி நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டிகள் மற்றும் விதிமுறைகளை அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் பின்பற்ற வேண்டுமென நினைவுறுத்தப்பட்டுள்ளன. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலன்கள் குறித்த கடப்பாட்டை அரசாங்கம் கொண்டுள்ளதால் அனைத்து கல்லூரிகளும் பள்ளிகளும் வழிகாட்டிகளை பின்பற்ற வேண்டுமென கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Kuala Pilah, Tuanku Jaafar அறிவியல் இடைநிலைப்பள்ளியின் இரண்டாம் படிவ மாணவன் Nuqman Naufal Shamsu Fadzil மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டபோது வெள்ளிக்கிழமையன்று மாவட்ட மருத்துவமனையில் மரணம் அடைந்தது தொடர்பில் கல்வி அமைச்சு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டது. இதர 700 மாணவர்களுடன் 7 கிலோமீட்டர் தூரத்தை ஓடி முடித்தை பின் அந்த மாணவன் மயக்கம் அடைந்து கீழே விழுந்தான். பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்தினரின் தனிப்பட்ட உரிமையை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என கல்வி அமைச்சு கேண்டுக் கொண்டது. அதே வேளையில் அந்த குடும்பத்திற்கு உடனடி உதவி வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அந்த மாணவன் 2016ஆம் ஆண்டிலிருந்து தேசிய இருதய சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்ததாக இதற்கு முன் Kuala Pilah போலீஸ் துணைத் தலைவர் Anuar Abdul Wahab கூறியிருந்தார். இதனிடையே மாணவர்களின் உடல் நலத்தை பள்ளிகள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என ஜோகூர் கல்வி மற்றும் தகவல்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் Azman Tamin வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!