Latestஉலகம்

150 ஆண்டுகளுக்குப் பிறகு நூலகத்திற்குத் திரும்பிய புத்தகம்: அபராதம் மட்டும் RM 80,000

சிட்னி, ஆகஸ்ட்-2 – ஆஸ்திரேலியாவில் உள்ள பொது நூலகம் ஒன்றுக்கு, சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகம் ஒன்று திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது.

1858-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட Antiquities of Athens என்ற அந்த அரிய புத்தகம், வீட்டைப் புதுப்பிக்கும் போது ஒரு பழைய அடுப்பின் பின்புறம் இருந்த தேயிலைப் பெட்டிக்குள் கண்டுபிடிக்கப்பட்டு, Kiama நூலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

1872-ஆம் ஆண்டு நூலக விதிகளின்படி, வாரத்திற்கு 3 பென்ஸ் என்ற கணக்கில் பணவீக்கத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால், இதற்கான தாமதக் கட்டணம் மட்டும் சுமார் 28,000 ஆஸ்திரேலிய டாலர்… அதாவது மலேசிய ரிங்கிட் மதிப்பில் சுமார் 80,300 ஆகும்.

இருப்பினும், 1870-களின் நூலகப் பதிவேடுகள் தொலைந்துவிட்டதால், புத்தகத்தை எடுத்துச் சென்றவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க இயலவில்லை; இதனால் அபராதமும் வசூலிக்கப்படாது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் புத்தகம் இனி நூலகத்தின் வரலாற்றுப் பிரிவில் பாதுகாப்பாகக் காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!