Latestமலேசியா

18 ஆண்டுகால நிர்வாகத் தாமதமே காரணம்; KL வெள்ளத் தடுப்புக் குளங்கள் விற்கப்பட்ட விவகாரத்தில் MACC விசாரணை அறிக்கை வெளியீடு

கோலாலாம்பூர், மே-26-கோலாலம்பூரில் வெள்ளத் தடுப்புக் குளங்கள் தனியார் மேம்பாட்டாளர்களுக்கு விற்கப்பட்ட விவகாரத்தில், 18 ஆண்டுகால நிர்வாகத் தாமதமே இதற்குக் முதன்மைக் காரணம் என, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC நடத்திய விசாரணையில் வெளிவந்துள்ளது.

JWP எனப்படும் கூட்டரசு பிரதேச இலாகாவுக்கு, MACC தலைமை ஆணையர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலிம் தலைமையிலான குழுவினர் வருகை மேற்கொண்டு, அவ்விசாரணைத் தொடர்பில் அளித்த விளக்கமளிப்புக் கூட்டத்தில் இது தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹானா இயோ இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையின்படி, சர்ச்சைக்குரிய இந்த வெள்ளத் தடுப்புக் குளங்களை ஒதுக்குவதற்கான ஒப்புதல் கடந்த 1998 ஜூன் 19 அன்றே வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், அடுத்த 18 ஆண்டுகளுக்கு அதனை அரசாங்க இதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் அரசாணைப் பதிவுச் செய்யப்படாமல் கடுமையான நிர்வாகத் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாகவே, கடந்தாண்டு அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெற்ற கோலாலம்பூர் கூட்டரசு வட்டார நிலக் குழு கூட்டத்தில், முந்தைய ஒப்புதல் இரத்துச் செய்யப்பட்டு, 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் 214 மில்லியன் ரிங்கிட் பிரீமியம் தொகையில் கலப்பு மேம்பாட்டுக்காக ஒரு தனியார் மேம்பாட்டாளருக்கு விற்கப்பட்டது.

இதையடுத்து, எஞ்சிய 30 விழுக்காடு வெள்ளத் தடுப்புக் குளங்கள் மற்றும் பசுமைப் பகுதிகளை உடனடியாக அரசாணையில் பதிவுச் செய்ய ஹானா இயோ பிரத்தியேகப் பணிக்குழுவை அமைத்துள்ளார்.

என்றாலும், இந்த ஒட்டுமொத்த பரிவர்த்தனையில் எவ்வித ஊழலோ அல்லது முறைகேடோ நடக்கவில்லை என்பதை MACC உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!