Latestமலேசியா

2007 முதல் 2025 வரை வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட RM5 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிப்பு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்த வழக்குகளுடன் தொடர்புடைய RM5 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களை கோலாலம்பூர் போலீஸ் இன்று அழித்தது.

மொத்தம் 5,022 போதைப்பொருள் சான்றுப் பொருட்கள் அழிக்கப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபடில் மார்சுஸ் தெரிவித்தார்.

அவற்றில் மெத்தாம்பெட்டமைன், கஞ்சா, கொக்கெய்ன், கெட்டமைன், கெத்தும் பானம் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் அடங்குகின்றன.

அழிக்கப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த எடை 544.28 கிலோகிராம் என்றும், திரவ வடிவிலான பொருட்களின் அளவு 963.34 லிட்டர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சான்றுப் பொருட்கள், 2007 முதல் 2025 வரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் நடவடிக்கைகள் நிறைவடைந்த 4,884 விசாரணைக் கோப்புகளுடன் தொடர்புடையவை என ஃபடில் கூறினார்.

கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற போதைப்பொருள் சான்றுப் பொருட்கள் அழிப்பு நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அனைத்து போதைப்பொருட்களும் Kualiti Alam Sdn Bhd நிறுவனத்தின் மூலம், நெகிரி செம்பிலானில் உள்ள Bukit Pelandok கழிவு சிகிச்சை மையத்தில் நவீன எரிப்பு முறையைப் பயன்படுத்தி அழிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!