Latestமலேசியா

அரச மன்னிப்புக் கோரி நஜீப் புதிய மனு தாக்கல் செய்யவில்லை; ஷாஃபியி விளக்கம்

கோலாலம்பூர், மார்ச்-27-அரச மன்னிப்புக் கோரி, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் புதிய மனுவைத் தாக்கல் செய்ததாகக் கூறப்படுவதை, அவரது வழக்கறிஞர் தான் ஸ்ரீ முஹமட் ஷாஃபியி அப்துல்லா மறுத்துள்ளார்.

ரமலான் மாதத்தில் அம்மனு தாக்கல் செய்யப்பட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், எந்த புதிய மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்றார் அவர்.

அப்படி ஏதாவது தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அந்தச் செய்தி தெரிந்த முதல் ஆளாக தாம் தான் இருந்திருப்பேன் என அவர் கூறினார்.

நஜீப் தற்போது SRC International ஊழல் வழக்கில் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையை காஜாங்கில் அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில், எஞ்சிய தண்டனை காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க அவர் கோரிய மனுவை கடந்த டிசம்பரில் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

அதன் பின், 1MDB வழக்கில் 25 ஊழல் குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நஜீப் தீர்ப்பளிக்கப்பட்டார்.

இவ்விரு வழக்குகளிலும் நஜிப் மேல்முறையீடு செய்துள்ளார்.

ஆக, நஜீப் தற்போது கவனம் செலுத்துவது இந்த மேல்முறையீடுகளில் தானே தவிர, புதிய மன்னிப்பு மனுவில் அல்ல என ஷாஃபியி தெளிவுப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!