Latestமலேசியா

2026 சிலாங்கூர் பயணக் கண்காட்சி: வெள்ளி விழாவை சிறப்பாகக் கொண்டாடிய Tourism Selangor

கோலாலம்பூர், ஜூலை 28 –சிலாங்கூரின் சுற்றுலாத் துறையின் 25 ஆண்டுகால சாதனைப் பயணத்தை கொண்டாடும் வகையில், Tourism Selangor, ‘2026 சிலாங்கூருக்கு வருகை தரும் ஆண்டு’ (Visit Selangor Year 2026) பிரச்சாரத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ‘2026 சிலாங்கூர் பயணக் கண்காட்சி’ (STF 2026)-யை கோலாலம்பூர் சென்ட்ரல் மார்க்கெட்டில் கோலாகலமாக நடத்தியது.

கடந்த 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இக்கண்காட்சியில், 50,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதுடன், 150,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான வர்த்தகப் பரிவர்த்தனையும் பதிவு செய்யப்பட்டது.

சுற்றுலாத் துறையை ஒரே தளத்தில் இணைக்கும் வகையில் நடைபெற்ற STF 2026-இல், சுற்றுலாத் தயாரிப்புகள், சுற்றுலாத் தலங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் துறைசார் நிறுவனங்கள் ஒன்றிணைந்தன.

இதன் மூலம் பார்வையாளர்கள் சிறப்பு சலுகைகள், புதிய பயண அனுபவங்கள் மற்றும் சிலாங்கூரின் பல்வேறு சுற்றுலா அம்சங்களை நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.

கேளிக்கை பூங்காக்கள், சூழலியல் சுற்றுலா, வேளாண் சுற்றுலா, பாரம்பரியச் சுற்றுலா, உணவுக் கலாச்சாரம், விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 40 கண்காட்சியாளர்கள் இதில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வு, சிலாங்கூரின் சுற்றுலா மேம்பாட்டு முயற்சிகளை வலுப்படுத்துவதோடு, மாநிலத்தின் பல்வேறு சுற்றுலா அனுபவங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் முக்கிய தளமாக விளங்குகிறது.

‘2026 சிலாங்கூருக்கு வருகை தரும் ஆண்டு’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ஒன்பது மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே இலக்கு என, தொடக்க விழாவில் உரையாற்றிய மாநில ஊராட்சி மற்றும் சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ நக் சுவீ லிம் (Dato’ Ng Suee Lim) தெரிவித்தார்.

இவ்வாண்டு Tourism Selangor தனது 25-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதால், STF 2026 வெள்ளி விழாவின் முக்கிய நிகழ்வாகவும் அமைந்தது.

கடந்த 25 ஆண்டுகளாக, சிலாங்கூரின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், மாநிலத்தின் தனித்துவமான சுற்றுலா அம்சங்களை உலகளவில் விளம்பரப்படுத்தவும், பல்வேறு தரப்புகளுடன் இணைந்து தொடர்ந்து செயல்பட்டு வருவதாக Tourism Selangor-இன் தலைமை நிர்வாக அதிகாரி சுவா யீ லிங் (Chua Yee Ling) தெரிவித்தார்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வில், கலாச்சார மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், படைப்பாற்றல் பட்டறைகள், புகைப்பட அமர்வுகள், மருத்துவ சுற்றுலா பிரிவின் கீழ் இலவச சுகாதாரப் பரிசோதனைகள், நேரலை பாட்காஸ்ட்கள் மற்றும் பிரத்யேக சுற்றுலா சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!