Latestமலேசியா

2026 HASiL மாதம் தொடக்கம்: வரி தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்க நடவடிக்கை

புத்ராஜெயா, அக்-1-உள்நாட்டு வருவாய் வாரியமான HASiL, பொதுமக்களின் வரி விழிப்புணர்வை அதிகரித்து, வரி தொடர்பான தகவல்கள் மற்றும் சேவைகளை எளிதாகப் பெறும் வகையில் ‘2026 HASiL மாதம்’ நிகழ்வை தொடக்கியுள்ளது. இம்முறை ‘வரி கல்வி மாதம்’ என்பதற்குப் பதிலாக ‘HASiL மாதம்’ என மறுபெயரிடப்பட்டுள்ளது.

‘சுயவிருப்பின் பேரில் தகவல் அளித்தல் – ஒரு கூட்டுப் பொறுப்பு’ என்ற கருப்பொருளில் அக்டோபர் முழுவதும் நாடு தழுவிய ‘HASiL விழிப்புணர்வுப் பயணம்’ நடத்தப்படுகிறது. வணிக வளாகங்கள், சமூகக் கூடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விளக்கங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் நேரடிச் சேவைகள் வழங்கப்படவுள்ளன.

வரி செலுத்துவோர் தங்களது வரி நிலையைச் சரிபார்த்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில், e-Invoice PKPS மற்றும் Stamp Duty PKPS உள்ளிட்ட திட்டங்களும் ஆக்ககரப்படுத்தப்படுகின்றன. வரி ஏய்ப்பு தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்க ‘ePelarian Cukai’இணையத் தளத்தையும் HASiL அறிமுகப்படுத்தியுள்ளது.

வரி செலுத்துவோர் தங்களது பொறுப்புகளை எளிதாகவும் முறையாகவும் நிறைவேற்றுவதற்கு தேவையான தகவல், வழிகாட்டுதல் மற்றும் உதவிகளை வழங்குவதே HASiL மாதத்தின் நோக்கம் என HASiL தலைமை நிர்வாக அதிகாரி Datuk Dr Abu Tariq Jamaluddin தெரிவித்தார்.

வரி குறித்த புரிதலையும், HASiL மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் அதிகரித்து, தேசிய வளர்ச்சியில் வரியின் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ‘2026 HASiL மாதம்’ உதவும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!