Latestமலேசியா

238 முறை தோல்வி, இருந்தாலும் மீண்டும் களத்தில் குதிக்கும் இந்தியாவின் தேர்தல் மன்னன் பத்மராஜன்

சென்னை, மார்ச் 29 – 238 தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வி கண்டாலும் அடுத்த சவாலுக்குத் தயாராகி வருகிறார் இந்தியாவின்தேர்தல் மன்னன்பத்மராஜன்.

வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் தருமபுரி தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.

பல்வேறு மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தல் முதல் இந்திய அதிபர் தேர்தல் வரை அவர் போட்டியிட்டுள்ளார்.

குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர்கள் Atal Bihari Vajpayee Manmohan Singh மற்றும் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை எதிர்த்துப் போட்டியிட்டு பத்மராஜன் தோல்வி அடைந்துள்ளார்.

எல்லாரும் வெற்றிக்காகப் போட்டியிட்டாலும் தனது நோக்கம் அதுவல்ல என்கிறார், 30 ஆண்டுகளாகப் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு வரும் 65 வயது பத்மராஜன்.

1988-ஆம் ஆண்டு தனது சொந்த ஊரான Mettur-ரில் முதன் முதலாக போட்டியிட்ட பத்மராஜன் இதுவரை 238 தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வி கண்டுள்ளார்.

இதன் மூலம், தொடர்சியாக அதிகத் தேர்தல்களில் தோல்வியுற்றவர் என இந்தியாவின் சாதனைப் புத்தகத்திலும் அவர் இடம் பிடித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு மேட்டூர் சட்டமன்றத் தேர்தலில் தான் இவர் அதிகபட்ச வாக்குகளைப் பெற்றார். அந்த முறை அவர் சுமார் 6,273 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியுற்றார்.

ஒவ்வொரு முறையும் டெப்பாசிட் காலியாகும் என்பது தெரிந்திருந்தும் , பத்மராஜன் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்குவதில்லை.

ஜனநாயக நாட்டில் சாதாரண மனிதனாலும் சாதிக்க முடியும் என்பதைக் காட்டவே விடாமல் தாம் தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிடுவதாக பத்மராஜன் பெருமிதத்தோடு கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!