Latestமலேசியா

250 கிலோ எடையுள்ள 23 வயது இளைஞரின் நல்லடக்கம்; 5 மணி நேரம் போராடிய APM படையினர்!

பாசீர் மாஸ், செப்டம்பர்-20,சுமார் 250 கிலோ எடை கொண்ட 23 வயது இளைஞரின் உடலை நல்லடக்கம் செய்யும் பணியை, கிளந்தான் ரந்தாவ் பாஞ்சாங் மலேசியத் தற்காப்புப் படையினர் (APM) ஏறக்குறைய 5 மணி நேரம் போராடி நிறைவுச் செய்தனர்.

வெள்ளிக்கிழமை ​சுகாதார அமைச்சின் அவசர அழைப்பைத் தொடர்ந்து இந்தச் சிறப்பு உதவி வழங்கப்பட்டது.

​காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்த நடவடிக்கை, பிற்பகல் 3.56 மணியளவில் முழுமையாக நிறைவடைந்தது.

இதில் ஓர் அதிகாரி, இரு வீரர்கள் மற்றும் ஒரு லாரி ஈடுபடுத்தப்பட்டன.

​குபாங் கெரியானில் உள்ள HPUSM மருத்துவமனையிலிருந்து கொண்டுவரப்பட்ட அந்த இளைஞரின் உடல், அல்-ஹிடாயா பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்பட்ட பின்னர், கிராம மக்களின் ஒத்துழைப்புடன் Gual Tinggi முஸ்லீம் மையத்துக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!