30 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்பு; போலந்தில் அதிர்ச்சி

வார்சோவ், அக்டோபர்-16,
போலந்து நாட்டில் சுமார் 30 ஆண்டுகளாகக் காணாமல் போனதாகக் கூறப்பட்ட பெண், கடைசியில் அவரது வீட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மிரெல்லா (Mirella) எனும் பெண், 15 வயதில் இருந்தபோது, 1998-ஆம் ஆண்டு தன் பெற்றோரால் வீட்டின் ஒரு சிறிய அறையில் அடைத்து வைக்கப்பட்டார்.
அனைவரும் அவர் காணாமல் போனதாக நினைத்தனர்; அவரது பெற்றோரும் மகளைக் காணவில்லை என போலீஸில் புகார் செய்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம், மிரெல்லா வீட்டினுலிருந்து சந்தேகத்திற்குரிய சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தார் போலீஸுக்கு தகவல் அளித்தனர்.
போலீஸார் சென்று விசாரித்தபோது தான் அந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
அதாவது 1998-ல் காணாமல் போனதாகக் கூறப்பட்ட மிரெல்லா அதே வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டார்…
…ஆனால், மோசமான தொற்று மற்றும் உடல் காயங்களுடன்…
இன்னும் சில நாட்கள் தாமதித்திருந்தாலும் அவர் உயிரிழந்திருக்கக்கூடும் என, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறினர்.
இப்போது 42 வயதான மிரெல்லா, தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
30 ஆண்டுகளில் அப்பெண்ணால் ஒருபோதும் மருத்துவரை சந்திக்கவோ, வெளியில் நடக்கவோ, அடையாள அட்டையையே பெற்றுக்கொள்ளவோ முடியவில்லை.
15 வயது சிறுமி காணாமல் போனதாக ஊரே நினைத்துக் கொண்டிருந்த நிலையில், வீட்டை விட்டு வெளியே போகாத அளவுக்கு பெற்றோரே அவளை வீட்டில் அடைத்து வைத்த இச்சம்பவம், போலந்தை நாட்டையே உலுக்கியுள்ளது.
இதையடுத்து அந்த ‘கல்நெஞ்சம்’ கொண்ட பெற்றோர் மீது
குற்ற விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.