Latestமலேசியா

4,994 பகடிவதை சம்பவங்கள்; ‘கவுன்சிலிங்’ ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கல்வி அமைச்சு உத்தேசம்

கோலாலம்பூர், நவம்பர் 1 – இவ்வாண்டு ஜனவரி தொடங்கி அக்டோபர் மாதம் வரையில், பள்ளிகளில் நான்காயிரத்து 994 பகடிவதை சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

அது, கடந்தாண்டு அதே காலக்கட்டத்தில் பதிவுச் செய்யப்பட்ட மூவாயிரத்து 887 சம்பவங்களை காட்டிலும் அதிகமென, கல்வித் துணையமைச்சர் லிம் உய் யிங் தெரிவித்தார்.

பள்ளிகளில் பகடிவதைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, கவுன்சிலிங் அல்லது ஆலோசக ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு ஆராய்ந்து வருவதாக துணையமைச்சர் சொன்னார்.

அதன் வாயிலாக, பகடிவதை சம்பசங்கள் நிகழ்வதற்கான உண்மைக் காரணத்தை கண்டறிந்து எளிதாக வேரறுக்க முடியும் என மக்களவையில் இன்று லிம் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!