Latestமலேசியா

6 குரல்கள், ஒரே மேடை, முடிவில்லா நினைவுகள்; ‘Madras 80’s 2.0’ நாளை JioSpace, பெட்டாலிங் ஜெயாவில் கலக்க வருகிறது

பெட்டாலிங் ஜெயா, செப். 4 – தமிழ் திரையிசையின் பொற்கால நினைவுகளை மீண்டும் மேடைக்கு கொண்டு வரும் Mojo Projects வழங்கும் ‘Madras 80’s 2.0’ இசை நிகழ்ச்சி நாளை, செப்டம்பர் 5ஆம் தேதி JioSpace, பெட்டாலிங் ஜெயாவில் நடைபெறவுள்ளது. Haricharan, Madhu Balakrishnan, Ranjith Govind, Haripriya, Punya Selva மற்றும் Priya Jerson உள்ளிட்ட ஆறு பாடகர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து Mojo Projects நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி Ratna K. Nadarajan ஊடகவியலாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

80களின் இசைத் தன்மையை மேடையில் மீண்டும் கொண்டு வர, 8 பேர் கொண்ட இசைக்குழு இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ளதாக Ratna K. Nadarajan தெரிவித்தார்.

மேலும், மெலொடி பாடல்கள் மட்டுமின்றி, pop, disco மற்றும் synth-pop பாணி பாடல்களும் நிகழ்ச்சியில் இடம்பெறும் என Punya Selva சிறப்பித்து கூறினார்.

குழுப் பாடல்கள், medley-கள் மற்றும் மறைந்த இசை ஆளுமைகளுக்கான அஞ்சலி பகுதிகளும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும் என Haricharan தெரிவித்தார்.

இதனிடையே, Mojo Projects தனது 10ஆம் ஆண்டு பயணத்தை எட்டியுள்ளது. இந்த 10 ஆண்டு பயணத்திற்கு கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் ஆதரவு முக்கிய காரணமாக இருந்ததாக Ratna K. Nadarajan தெரிவித்து கொண்டார்.

2018ஆம் ஆண்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற Madras: An 80’s Musical நிகழ்ச்சியின் அடுத்த கட்டமாக நடைபெறும் Madras 80’s 2.0, 80களின் மறக்க முடியாத தமிழ் பாடல்களை மீண்டும் நேரடி மேடையில் கொண்டுவரவுள்ளது. இசை ரசிகர்களுக்கு நினைவுகளும், நேரடி இசை அனுபவமும் கலந்த ஒரு சிறப்பு இரவாக இது அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!