
வாஷிங்டன், செப்டம்பர்-5,ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் “சிறிய விஷயம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் (J.D. Vance) கூற்றை ஆதரிக்கும் வகையில், இது முழு அளவிலான போர் அல்ல; ஒரு “இராணுவ மோதல்” மட்டுமே எனத் தெரிவித்தார்.பலர் இதனைப் போர் என்கின்றனர். ஆனால் இது போர் அல்ல என்றார் அவர்.
இந்த மோதலில் 18 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்த போதிலும், வியட்நாம் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களுடன் ஒப்பிடுகையில் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மிகவும் குறைவு என ட்ரம்ப் கூறிக் கொண்டார்.
மேலும், அமெரிக்காவின் இந்தத் தொடர் தாக்குதல்கள் ஈரானின் அணுஆயுதத் திறனை முற்றிலும் முடக்கியுள்ளதாகவும், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா தற்போது தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
6 மாதங்களாக இம்மோதல் நீடிக்கும் நிலையில், ட்ரம்பின் இப்பேச்சு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.



