அலோஸ்டார் , ஏப் 8 – Kedah , Kuala Nerang கில் மூன்று வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் போதைப் பொருள் கடத்தல் கும்பலை முறியடித்த போலீசார் ஷாபு உட்பட 730,000 ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். 20 கிலோவுக்கும் மேலான Meth போதைப் பொருள் மற்றும் 130 கிலோ Ketum இலைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக கெடா போலீஸ் தலைவர் Fisol Salleh தெரிவித்தார். இந்த கும்பலைச் சேர்ந்த ஒன்பது ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கைதான அவர்கள் அனைவரும் 1952ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக Fisol Salleh தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 26 முதல் 39 வயதுடைய ஆடவர்களில் தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவார் என இன்று கெடா போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார். இந்த சம்பவத்தின்போது இருவர் தப்பியோட முயன்ற போதிலும் அவர்கள் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டதாக Fisol Salleh தெரிவித்தார்.