Latestஉலகம்

8,600 ஆண்டுகளுக்கு முந்தைய, உலகின் பழைமையான ரொட்டி ; துருக்கியேவில் கண்டுபிடிப்பு

துருக்கியே, மார்ச் 11 – துருக்கியேவிலுள்ள, தொல்பொருள் ஆய்வாளர்கள், உலகின் மிகவும் பழமையான ரொட்டியைக் கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளனர்.

அந்த ரொட்டி, கி.மு-வுக்கு முன் சுமார் 6,600 ஆண்டுகளுக்கு முந்தையது என நம்பப்படுகிறது.

தென் துருக்கியேவில், ஐநாவின் உலக பாரம்பரிய தளமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள Catalhoyuk வட்டாத்திலுள்ள, “Mekan 66” எனுமிடத்தில், சேதமடைந்த அடுப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த அடுப்பை சுற்றி, கோதுமை, பார்லி உட்பட பட்டாணி விதைகளும் இரைந்து கிடக்க காணப்பட்டதாக கூறப்படுகிறது.

அடுப்பின் மேல், மாவும், நீரும் சேர்க்கப்பட்ட அந்த 8,600 ஆண்டுகள் பழைமையான வேகாத ரொட்டி வைக்கப்பட்டிருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Catalhoyuk மாவட்டம், உலகின் பழைமையான நெசவு, சுவர் ஓவியங்கள் மற்றும் மர கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இடமாக திகழ்கிறது.

அந்த வரிசையில், அங்கு ஆகக் கடைசியாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் உலகின் மிகவும் பழைமையான இந்த ரொட்டி அந்த இடத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த துருக்கியேவிற்கே பெருமை சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!