பத்து பஹாட், ஏப் 27 – ஓய்வுப் பெற்ற ஆசிரியை ஒருவர் வீட்டை துப்புரவுப்படுத்துவதற்கு வேலைக்கார பெண்ணை தேடி இணையத்தளத்தில் தமது வங்கிக் கணக்கிலிருந்து தொடக்க கட்டணமாக 15 ரிங்கிட்டை மட்டுமே செலுத்தினார் . அதன்பிறகு மோசடி கும்பல் அவரது வாழ்நாள் சேமிப்பான 250,000 ரிங்கிட்டை மோசடி செய்ததை அறிந்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். தனது வீட்டில் விருந்தினர்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த ஆசிரியை துப்புரவுப் பணிகளுக்காக வேலைக்கார பெண்ணின் சேவையை பெறுவதற்காக இணையத்தில் தேடியிருக்கிறார். அந்த
ஆசிரியர் ஒரு இணைப்பைக் கிளிக் செய்து, தனது வீட்டிற்கு ஒரு துப்புரவுத் தொழிலாளியை அனுப்ப அதற்கான நிறுவனத்திற்கு வைப்புத் தொகையாக RM15 மட்டுமே செலுத்தும்படி கேட்கப்பட்டதாக தெரிகிறது.
இது ஒரு நல்ல ஒப்பந்தம் என்று நினைத்து, அவர் தனது எல்லா விவரங்களையும் இணையத்தில் தெரிவித்திருக்கிறார். சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு பிழை இருந்ததால், பரிவர்த்தனை நடக்கவில்லை என்ற தகவலை அவர் பெற்றுள்ளார். அதைப்பற்றி பெரிதாக கருதாமால் தன் வீட்டை சுத்தம் செய்வதற்கு , வேறொருவரை நியமிப்பதற்கு அந்த 50 வயது பெண் முடிவு செய்தார். ஒரு வாரத்திற்குப்பிப் சம்பந்தப்பட்ட வங்கி அந்த பெண்ணை தொடர்புகொண்டு அவரது கணக்கில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 250,000 ரிங்கிட் பணம் கொண்ட அவரது இரண்டு கணக்குகள் காணாமல் போனதை அறிந்து அவர் வங்கிக்கு விரைந்ததோடு இந்த விவகாரம் குறித்து சில நாட்களுக்கு முன்பு போலீசில் புகார் செய்துள்ளார். இதனிடையே மற்றொரு முதலீட்டு மோசடியில், மூத்த குடிமக்கள் அல்லது நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தமாக 300,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நம்பி நிர்வாகி ஒருவர் 110,00 ரிங்கிட் மேல் இழந்துள்ளார்.