அலோர் காஜா, ஜூன் 24 – மலாக்கா, லெபோ AMJ என்படும் அலோர் காஜா – மலாக்கா தெங்ஙா – ஜாசின் சாலையில், இரு கார்களை உட்படுத்திய விபத்தில், ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
ஏழு மாத பெண் குழுந்தையுடன், இரு பெண்கள் காயமடைந்தனர்.
நேற்று மாலை மணி 7.07 வாக்கில் அவ்விபத்து நிகழ்ந்ததாக, அலோர் காஜா போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அஷாரி அபு சாமா (Ashari Abu Samah) தெரிவித்தார்.
மலாக்காவிலிருந்து, அலோர் காஜா நோக்கி பயணமான புரோடுவா பெஸ்ஸா ரக கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து எதிர்சாலையில் பயணித்த புரோட்டோன் சாகாவை மோதித் தள்ளியதாக கூறப்படுகிறது.
பெஸ்ஸா கார் ஓட்டுனரான 33 வயது அரிப்பின் அப்துல்லா தானி (Ariffin Abdullah Tani), தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, இரவு மணி 9.07 வாக்கில், அலோர் காஜா மருத்துவமனையில் உயிரிழந்தார்.
புரோட்டோன் சாகா காரை செலுத்திய 30 வயது பெண், அவரது ஏழு மாதக் குழந்தை, அவருடன் பயணித்த 24 வயது பெண் என மூவரும் சிகிச்சைகாக மலாக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.