Latestமலேசியா

இருவரைக் கொன்ற கெந்திங் சுற்றுலா பஸ் விபத்து; ஓட்டுநருக்கு லைசென்ஸ் இல்லை, 27 போக்குவரத்து விதிமுறைகளை மீறியுள்ளார்

கோலாலம்பூர், ஜூன் 30 – கெந்திங் மலையிலிருந்து கோலாலம்பூருக்கு திரும்பியபோது நேற்று காலை 11 மணிக்கு விபத்துக்குள்ளான சுற்றுலா பஸ் ஓட்டுநருக்கு லைசென்ஸ் இல்லை என்பதோடு 27 போக்குவரத்து விதிமுறைகளை அவர் மீறியிருக்கிறார் என பெந்தோங் போலீஸ் தலைவர் சூப்பிரிடன்டன்ட் ஷைய்ஹாம் முகமட் கஹார் ( Zaiham Mohd Kahar ) தெரிவித்திருக்கிறார். பஹாங் Jalan Turun Genting Highlands-சில் 16.5ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த அந்த விபத்தில் சீனாவைச் சேர்ந்த இரு சுற்றுப்பயணிகள் மரணம் அடைந்தனர். சம்பந்தப்பட்ட 32 வயதுடைய பஸ் ஓட்டுனர் மீது தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் 58 வயதுடைய ஷாங் பிங் ( Zhang Ping) மற்றும் 49 வயதுடைய Wang Shuhong ஆகியோர் இறந்தனர். 18 வெளிநாட்டு சுற்றுப்பயணிகள், பஸ் ஓட்டுனர், உதவி பஸ் ஓட்டுனர் மற்றும் சுற்றுலா வழிகாட்டியும் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டனர். காயம் அடைந்த அறுவர் பெந்தோங் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் செல்லப்பட்டனர். இறந்தவர்களின் உடல்களும் அங்கு கொண்டுச் செல்லப்பட்டதாக ஷைய்ஹாம் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!