பெட்டாலிங் ஜெயா, ஜூலை 5 – HRD Corp எனும் மனிதவள மேம்பாட்டு கழகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள முறைகேடுகள் தொடர்பில், அங்கு பணிப்புரியும் அதிகாரிகள் யாரையும், மனிதவள அமைச்சு இடைநீக்கம் செய்யாது.
அவ்விவகாரம் தொடர்பில் மனிதவள அமைச்சு உள் விசாரணையைத் தொடங்கினால் மட்டுமே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என அமைச்சின் தலைமை செயலாளர் கைருல் டிசைமி டவுட் தெரிவித்தார்.
ஆனால், ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை மேற்கொள்வதால், அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என டிசைமி விளக்கினார்.
HRD Corp தொடர்பில் தேசிய கண்காய்வு குழுவும், தேசிய கணிக்கை துறையும் முன் வைத்துள்ள முறைகேடுகள் தொடர்பில், ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்த பின்னர் டிசைமி செய்தியாளர்களிடம் பேசினார்.