சுங்கை பூலோ, ஜூலை 22 – சிலாங்கூர், சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த 226 மாணவர்கள், ஒரு லட்சத்து 250 ரிங்கிட் ஊக்கத் தொகையை பெற்றனர்.
SPM தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற அவர்களை பாராட்டும் வகையில், அந்த ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், யாயாசான் பேங்க் ராக்யாட் உடன் இணைந்து சம்பந்தப்பட்ட மாணவர்களை சிறப்பித்தார்.
அதே சமயம், இந்த ஊக்கத் தொகை, சம்பந்தப்பட்ட மாணவர்கள் எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளை குவிக்க உந்துதலாக அமையுமென, ரமணன் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக, சுங்கை பூலோ நாடாளுமன்ற SPM சிறப்பு உதவித் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து ரமணன் உரையாற்றினார்.
அத்திட்டத்திற்கு, யாயாசான் பேங்க் ராக்யாட் வழங்கி வரும் வற்றாத ஆதரவுக்கும் ரமணன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
கோத்தா டமான்சாரா மற்றும் பாயா ஜெராஸ் என இரு கட்டங்களாக நடத்தப்பட்ட அந்நிகழ்ச்சியின் வாயிலாக, கடந்தாண்டு SPM தேர்வில், சிறப்பு தேர்ச்சி பெற்ற, சுங்கை பூலோவிலுள்ள, ஏழு இடைநிலைப் பள்ளிகளை சேர்ந்த 226 மாணவர்களுக்கு, ஒரு லட்சத்து 250 ரிங்கிட் ஊக்கத் தொகையாக பகிர்ந்தளிக்கப்பட்டது.