Latestமலேசியா

அதிகாலையில் தீ விபத்தில் தந்தை மகள் உட்பட மூவர் மரணம்

கோத்தா மருடு , ஆக 1 – இன்று அதிகாலை மணி 2.19 அளவில் ஏற்பட்ட தீவிபத்தில் தந்தை, மகள் உட்பட மூவர் உயிரிழந்தனர். Pitas சிலுள்ள ஒரு பேரங்காடிக்கு முன்புறம் கம்போங் புளோக் 5 இல் உள்ள வீடு ஒன்றில் அந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்தது. 50 வயதுடைய அப்துல் மலேக் மாட் தாசின் ( Abdul Malik Mad Tasin) அவரது 11 வயது மகள் நுர் அட்ரியானா ( Nur Adriana Qistina Abdul Malik,) மற்றும் மற்றொரு ஆடவரான சாலே ஒன்டிங் ( Salleh Onding) என்பவரும் மரணம் அடைந்தனர்.

அந்த சம்பவத்தில் அப்துல் மலேக்கின் இரண்டு பிள்ளைகள் உட்பட மூவர் காயம் அடைந்ததாக சபா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை மையத்தின் அதிகாரி ரிக்கி மோகன் சிங் ராம்டே ( Riki Mohan Singh Ramday ) தெரிவித்தார். அந்த வீடு முற்றிலும் தீயில் அழிந்தது. அந்த தீ விபத்தில் புரோடுவா கெம்பாரா மற்றும் புரோட்டோன் வாஜா ஆகிய கார்களும் அழிந்ததாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!