பெய்ஜிங், ஆகஸ்ட் 8 – சீன தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று, கடலுக்குள் பயன்படுத்தக்கூடிய வகையில் அதிநவீன திமிங்கலச் சுறா ரோபோ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
கண்காணிப்பு கேமராவுடன் கூடிய அந்த ரோபோ, 4.8 மீட்டர் நீளமும், Optik படக்கருவிகள், சென்சார்கள், Sonar தொழில்நுட்பம் மற்றும் வழி நடத்தல் அமைப்புகளையும் கொண்டிருக்கிறது.
Shenyang Aerospaxe Xinguang குழுமத்தினால் உருவாக்கப்பட்ட இந்த சுறா ரோபோ, மற்ற மீன்களைப் போல வாயைத் திறப்பது, மூடுவது உட்பட அசைவுகளை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகின் முதல் புத்திசாலித்தனமான ரோபோவாக வகைப்படுத்தப்படும் இந்த ரோபோ, வயர்லெஸ் ரிமோட் கட்டுப்பாட்டைக் கொண்டு இயக்கக் கூடியது.
மணிக்கு 2.57 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தி 19.8 மீட்டர் ஆழத்திற்கு டைவ் செய்யும் திறனும் இந்த ரோபோவிற்கு உள்ளதாம்.
இதன் உருவாக்கத்திற்கான காரணம் தெரியவில்லை என்றாலும், இந்த ரோபோ தண்ணீரின் தரத்தைக் கண்காணிக்கவும், நீருக்கடியில் நிலப்பரப்பை வரைபடமாக்கவும் மற்றும் சிறப்புப் பணிகளை மேற்கொள்ளவும் முடியும் என்ற நம்புகிறார்கள்.
அதேவேளையில், ராணுவம் அல்லது கண்காணிப்பு நோக்கங்களுக்காக இது சீனாவால் பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.