ஷா ஆலாம், ஆகஸ்ட்-22, சிலாங்கூர், ஷா ஆலாமில் சதா திட்டிக் கொண்டேயிருந்ததால் சொந்த தாய் என்றும் பாராமல் கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளான் 20 வயது மகன்.
ஷா ஆலாம், செக்ஷன் 25-ல் உள்ள ஒரு வீட்டில் செவ்வாய்க்கிழமை மாலை அச்சம்பவம் நிகழ்ந்தது.
பள்ளி முடிந்து வீடு திரும்பிய கடைசிப் பிள்ளை, சமையலறையில் தாய் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு பக்கத்து வீட்டாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
போலீஸ் வந்து, 40 வயது அந்த மியன்மார் நாட்டுப் பெண்ணின் சடலத்தை மீட்டது.
குத்தி விட்டு தப்பியோடியவனை, அதே நாள் இரவு 7.30 மணியளவில் போலீஸ் கைதுச் செய்தது.
நிதிப் பிரச்னையால் தனது அந்த மூத்த மகனை தாய் சதா திட்டிக் கொண்டே இருந்ததால் சினமடைந்து அவன் அக்காரியத்தைச் செய்துள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டது.
கொலை விசாரணைக்காக 7 நாட்களுக்கு அவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.
சம்பவத்தின் போது அப்பெண்ணின் கணவர் வேலையிடத்தில் இருந்தார்.
விசாரணைக்காக இதுவரை 8 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.