ஷா ஆலாம், ஆகஸ்ட் -26 – சிலாங்கூர், கிள்ளான், பண்டார் புக்கிட் திங்கியில் வெள்ளிக்கிழமை அதிகாலை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் ஓர் ஆடவர் காயமுற்றார்.
Lebuh Batu Nilam சாலையிலுள்ள உணவகமொன்றில் அதிகாலை 2.15 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
உணவகத்தின் வெளியே அமர்ந்திருந்த 45 வயது ஆடவரை நோக்கி, வெள்ளை நிற MPV வாகனத்தில் வந்திறங்கிய மர்ம துப்பாக்கிச் சூட்டை கிளப்பி விட்டு தப்பிச் சென்றார்.
அதில் பிட்டத்தில் காயமடைந்த நபர் கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகக் தெரிவிக்கப்பட்டது.
கொலை முயற்சி தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 307-வது பிரிவின் கீழ் போலீஸ் அச்சம்பவத்தை விசாரிக்கிறது.
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் விசாரணைக்கு உதவுமாறு தென் கிள்ளான் போலீஸ் கேட்டுக் கொண்டது.