Latestமலேசியா

கூச்சிங் விமான நிலையத்தில் முதலுதவி வழங்கி கணவரின் உயிரை காப்பாற்றிய பெண்ணை தேடும் மனைவி

கூச்சிங், மே 5 – கூச்சிங் அனைத்துலக விமான நிலையத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தனது கணவருக்கு உடனடியாக CPR முதலுதவி சிகிச்சை வழங்கி காப்பாற்றிய இளம் பெண் ஒருவரை சம்பந்தப்பட்டவரின் மனைவி தேடி வருகிறார்.

மயிரிழையில் தனது கணவரான 55 வயதுடைய Lawவின் உயிரை காப்பாற்றிய அந்த இளம் பெண் யார் என்று தெரியவில்லை என்பதால் அவருக்கு நன்றி கூறுவதற்காக சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் தொலைபேசி எண்களை தெரிந்தவர்கள் வழங்கி உதவ வேண்டும் என அம்மனைவி வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.

ஏப்ரல் 30, காலை 11.30 மணியளவில் கூச்சிங் அனைத்துலக விமான நிலையத்தின் உள்நாட்டு வருகை மண்டபத்தில் விமானத்திலிருந்து தரையிறங்கிய சில நிமிடங்களில் தனது கணவர் மயங்கி விழுந்தார்.

அப்போது அங்கு இருந்த இளம் பெண் ஒருவர் தனது கணவருக்கு உடனடியாக 30 நிமிடங்களுக்கு CPR முதலுதவி வழங்கியதால் அவரை காப்பாற்றியுள்ளார்.

அவருக்கு நாங்கள் நன்றி கடன் பட்டுள்ளோம். இது குறித்து அறிந்தவர்கள் உடனடியாக தம்மை தொடர்புக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!