Latestமலேசியா

‘Mission: Impossible – The Final Reckoning’ படப்பிடிப்பில் மரணத்தின் விளிம்பு வரை சென்ற டாம் குருஸ்; வெளியான அதிர்ச்சித் தகவல்

கோலாலம்பூர், மே-17 – ஹோலிவூட்டின் உலகப் புகழ்பெற்ற அதிரடி சாகச நடிகரான டாம் குருஸ், Missions Impossible படத்தின் 8-ஆம் பாகமான The Final Reckoning படப்பிடிப்பில், மரணத்தின் விளிம்பைத் தொட்டு வந்துள்ளார்.

2025 கேன்ஸ் திரைப்பட விழாவில் பேசிய போது, படத்தின் இயக்குநர் Christopher McQuarrie இந்த அதிர்ச்சித் தகவலை பகிர்ந்துகொண்டார்.

தென்னாப்பிரிக்காவில் சாகச விமானக் காட்சியைப் படமாக்கும் போது, விமானத்தின் இறக்கையிலேயே டாம் குருஸ் மயங்கி விட்டார்.

தனியாளாக அவர் அவ்விமானத்தை ஓட்டுவது போன்று காட்சி படமாக்கப்பட்டது.

அப்போது சுமார் 22 நிமிடங்களுக்கு அவர் விமானத்தின் கோக்பிட்டுக்கு வெளியே இருந்தார்; இது அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பு வரையறையை விட 10 நிமிடங்கள் அதிகமாகும்.

காட்சியோடு ஒன்றிப் போனதால் தனது முழு ஆற்றலையும் தெம்பையும் டாம் வெளிப்படுத்தினார்; இதில் உடல் சோர்வுற்று, எழுந்திருக்க முடியாமல் விமானத்தின் இறக்கையிலேயே அவர் படுத்துகிடந்தார்.

கைகள் அந்தரத்தில் தொங்கியபடி இருந்ததால், அவர் சுயநினைவோடு இருக்கிறாரா இல்லையா என்பது கூட எங்களுக்குத் தெரியவில்லை.

போதாக்குறைக்கு, விமானத்தில் வெறும் 6 நிமிடங்களுக்குப் பயன்படுத்தக் கூடிய அளவிலேயே எரிபொருள் இருந்தது.

இதனால் நாங்கள் கலங்கித் தான் போனோம்; ஆனால் சிறிது நேரத்தில் அவரின் உடல் அசைவதை கண்டதும், எங்களுக்குப் போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது.

என்னதான் பயிற்சிப் பெற்ற சாகச விமானியாக இருந்தாலும், 62 வயதில் டாம் குருஸ் ஒருவரைத் தவிர இந்த மயிர் கூச்செறியும் சாகசத்தை உலகில் வேறெவராலும் செய்திருக்க முடியாது என, பார்வையாளர்களின் பெரும் கைத்தட்டலுக்கு மத்தியில் McQuarrie குறிப்பிட்டார்.

அதிரடி சாகச உளவுபேதா படமான இந்த Mission Impossible – The Final Reckoning இன்று முதல் நாடு முழுவதும் திரைக்கு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!