Latestமலேசியா

மூத்த நடிகர் ராஜேஷ் மாரடைப்பால் மரணம்

சென்னை, மே-29 – தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ் இன்று சென்னையில் காலமானார்.

அவருக்கு வயது 75.

காலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லபடும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது.

பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய பின்னர் 1974-ஆம் ஆண்டு கே.பாலசந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் சிறு வேடத்தில் சினிமாவில் அறிமுகமானார்.

இவரது நடிப்பில் மக்கள் மத்தியில் நின்ற படங்களில் ‘அந்த 7 நாட்கள்’, ‘கன்னிப் பருவத்திலே’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ குறிப்பிடத்தக்கவையாகும்.

ஹூரோ, வில்லன், குணசித்திரம் என 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ராஜேஷ், தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துனராகவும் இருந்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!