Latestமலேசியா

இணையத்தில் Toyota Hilux வாகன விற்பனையாம்: 241,700 ரிங்கிட் மோசடிக்கு ஆளான முதியவர்

குவாலா திரங்கானு – ஜூலை-28 – இணையம் வாயிலாக 4 சக்கர வாகனத்தை வாங்க முயன்ற ஓர் ஆடவர் 241,700 ரிங்கிட்டை இழந்து மோசம் போயுள்ளார். ‘பயன்படுத்தப்பட்ட 2017 மாடலான Toyota Hilux 2.4 Auto வாகனம் விற்பனைக்கு’ என்ற facebook விளம்பரத்தால் 52 வயது அந்த வங்கியாளர் கவரப்பட்டுள்ளார்.

இதையடுத்து சிலாங்கூர் போர்ட் கிள்ளானில் இயங்கி வரும் கார் விற்பனை நிறுவனத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்பட்ட ஒரு நபருடன் வாட்சப் வாயிலாக அவர் தொடர்புகொண்டார்.

பிறகு ஜூலை 9 முதல் 21-ஆம் தேதி வரைக்குட்பட்ட காலக்கட்டத்தில் 18 வங்கிக் கணக்குகளுக்கு 40 தடவையாக 241,700 ரிங்கிட்டை அவர் மாற்றியிருக்கிறார்.

அவையனத்தும் அவரின் சேமிப்பு மற்றும் EPF பணமாகும். இவ்வளவு பணம் போட்டப் பிறகும், சுங்கத்துறையின் கைவிரல் ரேகை அலுவலுக்காக, கூடுதலாக 31,000 ரிங்கிட் தேவை எனக் கேட்கப்பட்ட போதே அவ்வாடவருக்கு சந்தேகம் கிளம்பியது.

வாகனமும் கைக்கு வந்துசேர்ந்தபாடில்லை. இதையடுத்து நேற்று காலை குவாலா திரங்கானு போலிஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!