Latestமலேசியா

RON95 பெட்ரோல் மானிய மறுஆய்வு; நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட மாட்டார்கள் – பிரதமர் அன்வார் உறுதி

கோலாலம்பூர், மே-11-அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கான RON95 பெட்ரோல் மானியத்தை மறுஆய்வு செய்யும் பரிந்துரையை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மறுஆய்வு நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்காத வகையில் அமையும் என உத்தரவாதம் அளித்தார்.

குறிப்பாக T20 அல்லது T15 என எந்தப் பிரிவினருக்கு இது பொருந்தும் என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. என்றார் அவர்.

​மத்தியக் கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலை அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் அரசாங்கத்தின் பெட்ரோல் மானியச் செலவு 7 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், தகுதியானவர்களுக்கு மட்டுமே மானியம் சென்றடைவதை உறுதிச் செய்ய இந்த நடவடிக்கை அவசியம் என்றார்.

​தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றமான MTEN இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தத் திட்டம் எளிமையாக அமுல்படுத்தப்படுவதையும், அதே வேளையில் உண்மையான பயனர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் அரசு மிகக் கவனமாகக் கண்காணித்து வருகிறது.

​எது எப்படி இருந்தாலும், மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் நிதிச் சுமையைச் சமாளிப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என அன்வார் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!