Latestமலேசியா

பராமரிப்பு மையத்தில் விடப்பட்ட 3 மாத குழந்தை சுயநினைவு இழந்தது -போலீஸ் விசாரணை

கோலா சிலாங்கூர், பிப் 5 – Puncak Alam மில் குழந்தை பராமரிப்பு மையத்தில் விடப்பட்டிருந்த மூன்று மாத பெண் குழந்தை சுயநினைவை இழந்ததைத் தொடர்ந்து குழந்தை அலட்சியம் தொடர்பில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஜனவரி 29ஆம் தேதியன்று இரவு மணி 11.12 அளவில் தங்களது தரப்பு புகாரைப் பெற்றதாக கோலா சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் அஷாருடின் தாஜூடின்
( Azaharudin Tajudin ) தெரிவித்தார்.

Puncak Alam, Alam Perdanaவில் அடுக்கு மாடி குடியிருப்பிலுள்ள குழந்தைகள் பரமாரிப்பாளரிடம் விடப்பட்ட தனது மகள் அழுதுக்கொண்டும் , சரியாக நிற்க முடியாமலும் வழக்கத்திற்கு மாறான சூழ்நிலையில் இருந்ததாக பெண் ஒருவர் புகார் செய்துள்ளார்.

அதன்பிறகு குழந்தையை வீட்டிற்கு கொண்டுச் சென்ற பின் அது சுயநினைவை இழந்ததைத் தொடர்ந்து உடனடியாக Puncak Alam UiTM மருத்துவமனைக்கு மேல் சிகிச்சை மேற்கொள்வதற்கு முன் அருகேயுள்ள கிளினிக்கிற்கு கொண்டு சென்றதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து 2001ஆம் ஆண்டின் குழந்தைகள் சட்டத்தின் 31 (1) பிரிவின் கீழ் இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக Superintendan Azaharudin கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!