
கெப்போங் பகுதியிலிருக்கும் வீட்டில் தம்பதியினர் மரணம்: கொலையா? தற்கொலை? போலீஸ் சந்தேகம்
கோலாலம்பூர்,பிப்ரவரி-12,
கோலாலம்பூர் கெப்போங், சன்வே எஸ்பிகே டாமான்சாராவில் (Sunway SPK Damansara, Kepong) உள்ள ஒரு வீட்டில் தம்பதியினர் இரத்தக் களத்தில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கொலை அல்லது தற்கொலை சம்பவமாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் Assistant Commissioner Ahmad Sukarno Mohd Zahari கூறுகையில், நேற்று காலை 11 மணியளவில் இச்சம்பவம் தொடர்பான அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. அதில், ஒரு ஆணும் பெண்ணும் உயிரிழந்த நிலையில் இருப்பதாக தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், 54 வயதுடைய அந்த ஆணின் கழுத்தில் குத்து காயங்கள் கண்டறியப்பட்டன என்று கூறியிருந்தனர். அவரது அருகிலிருந்த 52 வயதுடைய பெண்ணின் உடலில் மொத்தம் 13 குத்துக்காயங்கள் இருந்ததெனவும் அதில் 10 காயங்கள் கழுத்துப் பகுதியிலும், இடது கையில் ஒன்றும், மேலும் இரண்டு காயங்கள் உடலின் பிற பகுதிகளில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தம்பதியினருக்கிடையிலான கருத்து முரண்பாடே இந்த துயரச்சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்ப விசாரணையில் நம்பப்படுகிறது.
இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு மேல் விசாரணையம் நடைபெற்று வருகிறது.



