
பத்து பஹாட்டில் பெண்ணின் முன் நிர்வாணமாக நின்ற குற்றச்சாட்டு: தகாத காட்சிகளை வைத்திருந்த மாணவன் நீதிமன்றத்தில் ஆஜர்
பத்து பஹாட் ,பிப்ரவரி-16,
பத்து பஹாட்டில் பெண்ணின் முன் நிர்வாணமாக நின்ற குற்றச்சாட்டு: தகாத காட்சிகளை வைத்திருந்த மாணவன் நீதிமன்றத்தில் ஆஜர்
பத்து பஹாட், பிப்ரவரி 16 – பெண்ணின் முன்னால் நிர்வாணமாக நின்று ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதுடன், 2,000க்கும் அதிகமான தகாத வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட அரசு பல்கலைக்கழக மாணவன் ஒருவன் இங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.
24 வயதான அம்மாணவன் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் வாசித்தபோது, அவன் நீதிபதியின் முன்னிலையில் அக்குற்றங்களை மறுத்துள்ளான்.
கடந்த ஜனவரி 26 ஆம் தேதி, பாரிட் ராஜா அருகிலுள்ள ஜாலான் பாரிட் செம்படான் லாவுட் பகுதியில், 34 வயது இல்லத்தரசியின் முன்னால் நிர்வாணமாக நின்றதாக முதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தனது கைப்பேசியில் 1,259 தகாத வீடியோக்கள் மற்றும் 1,196 தகாத புகைப்படங்கள் வைத்திருந்ததாக இரண்டாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்தபோது, பாதிக்கப்பட்ட பெண் தனது இரண்டு தோழிகளுடன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நிலையில் அருகிலிருந்த புதரிலிருந்து சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தபோது ஒருவன் நிர்வாணமாக நின்றிருப்பதை கண்டுள்ளனர்.
பின்னர் அவன் அவர்களை பின்தொடரத் தொடங்கியதால் பயந்த அவர்கள் உடனே ஓடிப்போய் உதவி கேட்டு கத்தியுள்ளனர். அதன் பிறகு, அந்த ஆடவன் புதருக்குள் ஓடி மறைந்து, மீண்டும் தனது ஆடைகளை அணிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்றம் 3,000 ரிங்கிட் ஜாமீனை விதித்து, வழக்கு முடியும் வரை பாதிக்கப்பட்டவரையும் சாட்சிகளையும் தொடர்பு கொள்ளவும் தடை விதித்துள்ளது. மேலும் இந்த வழக்கு ஏப்ரல் 20 ஆம் தேதியன்று மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.



