Latestமலேசியா

கிரிப்தோ கரன்சி கொள்ளை தொடர்பில் 12 போஸ்காரர்கள் கைது

கிரிப்தோ கரன்சி கொள்ளை தொடர்பில் 12 போஸ்காரர்கள் கைது

காஜாங் , பிப்ரவரி-19,

காஜாங்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது சீன நாட்டவர்களிடமிருந்து சுமார் 200,000 ரிங்கிட் கிரிப்டோகரன்சியை கொள்ளையடித்தது தொடர்பில் கூட்டரசு வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் உட்பட 12 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

24 முதல் 47 வயதுக்குட்பட்ட போலீஸ் துணை Superintendent ஒருவர், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சார்ஜெண்ட், ஆறு காப்ரல்கள். இரண்டு லேன்ஸ் காப்ரல்கள் மற்றும் ஒரு கான்ஸ்டபிலும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர் .

காஜாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த சிறப்பு குழு ஒன்று இரண்டு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

காஜாங்கின் கண்ட்ரி ஹைட்ஸில் ( Country Heights ) உள்ள ஒரு வாடகைக்கு எடுக்கப்பட்ட பங்களாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைக்குப்பின் , தானும் ஏழு நண்பர்களும் தங்கள் விடுதலைக்காக கிரிப்டோகரன்சியை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் கூறி 31 வயதான சீன சந்தை ஆய்வாளர் செய்த புகாரைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பிப்ரவரி 5 ஆம் தேதி இரவு 11.10 மணிக்கு மாவட்ட வர்த்தக குற்றப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு இரட்டை மாடி பங்களாவை சோதனை செய்ததோடு, அதில் இருந்தவர்கள் கம்போடியாவில் உள்ள ஒரு கும்பலுடன் தொடர்புடைய ஆன்லைன் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக அந்த குழுவிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களது மின்னணு சாதனங்கள் மற்றும் கடப்பிதழ்களை பரிசோதித்தபிறகுத குற்றச் செயல்களுக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. மேலும் புகார்தாரர் மற்றும் அவரது நண்பர்கள் கம்போடியாவுக்கு பயணம் செய்ததற்கான எந்த பதிவும் இல்லையென்றும் தெரியவந்தது.

கும்பலாக கொள்ளையிட்டது தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 395 ஆவது பிரிவின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!