Latestமலேசியா

ரவாங், புக்கிட் செந்தோசாவில் கலவரம்; 6 பேர் கைது

ரவாங், புக்கிட் செந்தோசாவில் கலவரம்; 6 பேர் கைது

ரவாங், பிப்ரவரி-24,

ரவாங், புக்கிட் செந்தோசாவில் உள்ள குடியிருப்புப் பகுதியொன்றில் நிகழ்ந்த கலவரம் தொடர்பான விசாரணைக்காக, போலீஸார் 6 ஆடவர்களை கைதுச் செய்துள்ளனர்.

அச்சம்பவ காணொலி முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலானது.

அது தொடர்பில் செய்யப்பட்ட 2 புகார்கள் அடிப்படையில் 18 முதல் 49 வயது வரையிலான அவர்கள் கைதானதாக, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ Shazeli Kahar தெரிவித்தார்.

2 குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தவறான புரிந்துணர்வு மற்றும் அதிருப்தியே கலவரம் மூலக் காரணம் என தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

“இது தனிப்பட்ட தகராறே. குண்டர் கும்பல் அம்சமோ அல்லது இனமோதலோ அல்ல”  என்றார் அவர்.

மேற்கொண்டு விசாரணை நடைபெறும் வேளை, சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், பொது அமைதியை சீர்குலைக்க வேண்டாம் என்றும் பொது மக்களை Shazeli அறிவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!