
போஸ்டன், பிப்ரவரி-27-உங்களின் தினசரி காப்பி அல்லது டீ, மூளை ஆரோக்கியத்தை காக்க உதவலாம் என புதிய ஆய்வு கூறுகிறது.
அமெரிக்காவின் பிரசித்திப் பெற்ற ஹாவர்ட் பல்கலைக்கழகம் நடத்திய 43 ஆண்டு கால நீண்ட ஆய்வில் அது கண்டறியப்பட்டது.
ஆய்வில் பங்கேற்ற 130,000 பேரில் தினமும் 2–3 கிளாஸ் காப்பி அல்லது 1–2 கிளாஸ் டீ குடிப்பவர்களுக்கு, dementia எனப்படும் முதுமைக்கால மறதி ஏற்படும் அபாயம் குறைவாக இருந்தது.
காப்பி மற்றும் டீயில் உள்ள caffeine மற்றும் polyphenols இரண்டும் மூளை செல்களை பாதுகாத்து, வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.
ஆய்வில் 11,000 பேருக்கு dementia ஏற்பட்டாலும், மிதமான அளவில் காப்பி அல்லது டீ குடித்தவர்களுக்கு நினைவாற்றல் குறைவு மெதுவாக இருந்தது தெரியவந்துள்ளது.
ஆனால் இந்த டீ – காப்பியின் தாக்கம் சிறியதே என நிபுணகள் எச்சரிக்கின்றனர்.
ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, நல்ல தூக்கம், சமூக தொடர்பு ஆகியவை இன்னும் முக்கியம் என அவர்கள் சுட்டிக் காட்டினர்.
எனினும், உங்களின் காலை காப்பி, புத்துணர்ச்சியை மட்டுமல்ல மனதை கூர்மையாக்கவும் உதவலாம்…



